Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, August 15, 2020

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பிற்காக இன்று செங்கோட்டையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு அமைப்பு

படத்திலிருப்பது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பிற்காக இன்று செங்கோட்டையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு அமைப்பு தான் இது.

இந்திய பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிரிகளின் ட்ரோன்கள் வானில் பறந்து வரும்போது அதை 3 கிலோமீட்டர் தொலைவிலேயே கண்டறிந்து அதை ஜாம் செய்யும் திறன் பெற்றது இந்த ஆயுதம்.

மேலும் எதிரியின் ட்ரோன் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு பிரதமரை நெருங்கி விட்டால் அந்த ட்ரோன் மீது லேசர் கதிர் வீச்சுகளை பாயச் செய்து அந்த ட்ரோனை கீழே விழ வைக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றது இந்த ஆயுதம்.

 இந்த ஆயுதத்தை இந்தியாவின் DRDO உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரித்தது என்பது இந்தியர்கள் பெருமைப்படக் கூடிய ஒரு செய்தியாகும்.

ஜெய்ஹிந்த்.


No comments:

Post a Comment