டேபிள் டாப்.. நீங்களே படத்தை பாருங்க.. இப்படி ரன்வே இருந்தால் எப்படி விமானத்தை நிறுத்த முடியும்?
கோழிக்கோடு: டேபிள் டாப் விமான ஓடுபாதைகள் எப்போதுமே ஆபத்தானவை.. சவாலானவை. கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையும் அப்படியான ஒன்றுதான்.
நாம் இத்துடன் இணைத்துள்ள, கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையின் சாட்டிலைட் புகைப்படத்தை பாருங்கள். பார்க்கும் உங்களுக்கே பகீரென்று இருக்கிறதா..? ஆனால் இங்குதான் விமானங்கள் தரையிறங்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில், ஓடு பாதை வழுக்கும் தன்மையோடு இருக்கும்போது, இதில் விமானத்தை தரையிறக்கி, அதை நிறுத்துவது எவ்வளவு சிரமமா இருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
பக்கவாட்டு பகுதி அனைத்தும், பெரிய பள்ளம். சுமார் 200 அடி ஆழம் இருக்குமாம். மேலே ஒரு ஓடு பாதை. இப்படித்தான் இருக்கிறது கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடு பாதை பகுதி. எனவேதான், இதை டேபிள் டாப் ஓடுபாதை என்று அழைக்கிறார்கள். டேபிள் மாதியே ஒரு தோற்றம் இருப்பதால்தான் அந்த பெயர்.
அனைத்து விமான நிலையங்களிலும் ஓடு பாதை முடிந்ததும், சற்று தூரம் புல்வெளி போன்ற பரப்பு இருக்கும். ஒருவேளை, விமானம் வழுக்கிக் கொண்டு ஓடினாலும், அங்கே கட்டுப்பாடு கிடைக்கும். ஆனால், இந்த ஓடு பாதையை பார்த்தாலே தெரிகிறது, வழுக்கினால், அதற்கு மேல் வாய்ப்பே கிடையாது என்பது.
No comments:
Post a Comment