NEW TAX REGIME PROPOSED BY THE GOVERNMENT:
பட்ஜெட்டில் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...!
பூமி திருத்தி உண்.. ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய
நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது தமிழர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாட்டின் கடன் குறைந்துள்ளது; எளிமையான முறையில் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல்
அறிமுகம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..
2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் வருமான வரி சதவீதத்தைக் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வருமான வரி குறைப்புதான் சாமானியர்களின் எதிர்பார்ப்பாக இருந்துவரும். அந்த வகையில்
வருமான வரி விதிப்பு விகிதத்தைக் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.
அதன்படி, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் முதல் 7.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாகக் குறைக்கப்படுள்ளது. 7.5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
10 லட்ச ரூபாய் முதல் 12.5 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 12.5 லட்ச ரூபாயிலிருந்து 15 லட்ச ரூபாய் கொண்டவர்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 15 லட்சத்துக்கு அதிகமான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கான வரி 30 சதவீதமாக தொடரும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment