இஸ்தான்புல்,
துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து 189 பயணிகளுடன் பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இஸ்தான்புலில் உள்ள சபிஹா ஹோக்கன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி மாலை 6.19 மணியளவில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி 60 மீட்டர் விலகிச்சென்று மோதி நின்றது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. மேலும் தீ பிடிக்க தொடங்கியதில் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளில் 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த 183 பயணிகளில் 52பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் துருக்கி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
விமானம் இரண்டாக உடைந்து நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. விமானம் விபத்துக்குள்ளனது பற்றி துருக்கி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment