உதான்’ திட்டத்தில்100 புதிய விமான
நிலையங்கள் அமைக்கப்படும்
பட்ஜெட்டில் அறிவிப்பு
‘உதான்‘ திட்டத்தில் மேலும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-
பதிவு: பிப்ரவரி 02, 2020 06:35 AM
புதுடெல்லி,
‘உதான்‘ திட்டப்படி, சிறு நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், மேலும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். 2025-ம் ஆண்டுக்குள், இப்பணி முடிக்கப்படும்.
போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது-தனியார் கூட்டு அடிப்படையில், ஆயிரத்து 150 ரெயில்கள் இயக்கப்படும். தனியார் துறையின் உதவியுடன் 4 ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும்.
சுற்றுலா தலங்களை இணைக்க மேலும் பல ‘தேஜா” ரக ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
ரெயில் பாதையை ஒட்டி பெரிய அளவில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறினார்.
No comments:
Post a Comment