FASTag இல்லாத வாகனங்களிடம் இரட்டிப்புக் கட்டணம்... மிரள வைக்கும் அபராதத் தொகை வசூல்!
FASTag இல்லாமல் FASTag வரிசையில் நுழையும் வாகனங்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்திருந்தது.
இதுவரையில் 1.55 கோடி FASTag அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், FASTag இல்லாமல் FASTag வரிசையில் தவறாக நுழைந்தோர்களிடம் இருந்து 20 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் பேரிடமிருந்து இந்த 20 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்தான் FASTag முறையே அறிமுகமானது. ஆனால், மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில் அபராதக் கட்டணம் மட்டும் கோடிகளில் வசூலாகியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் டோல் கட்டணம் செலுத்த நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் அவஸ்தையைப் போக்கவே நெடுஞ்சாலைத்துறை சார்பாக FASTag என்னும் எலெக்ட்ரானிக் கட்டண முறை அமல் செய்யப்பட்டது. இதுவரையில் 1.55 கோடி FASTag அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment