Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, February 10, 2020

சென்னையில் 14-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: TamilNadu Mega Job Fair - 2020

Chennai Guindy Job Fair on 14th February 2020 [govt of TamilNadu Recruitment]

சென்னையில் 14-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்..

சென்னையில் வரும் 14-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முழு கூடுதல் பொறுப்பு இயக்குநர் வே.விஷ்ணு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வே.விஷ்ணு இன்று (பிப்.10) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளி கிழமையானது 'வேலைவாய்ப்பு வெள்ளி'யாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.

இம்முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட பணிகாலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

QUALIFICATION: 10th Pass to Any Degree, ITI, Diploma
DATE: 14th February 2020
TIME: 10 AM to 2 PM.
VACANCY: Various
AGE LIMIT: 18 to 35 Years


இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள் / ஆட்கள் தேவைப்படும் நேர்வில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் / தனியார் துறை நிறுவனங்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அறிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் / தனியார் துறை நிறுவனங்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அறிவித்துள்ளார்.

CHENNAI GUINDY PRIVATE JOB FAIR ON 14TH FEBRUARY 2020

VENUE:
Employment Office,
Near Women's ITI,
Guindy,
Chennai-600032
Ph: 044-22500134

How to Apply?
Visit Interview venue directly with Resume, Passport Size photo, Certificate and Aadhar Card. .


No comments:

Post a Comment