Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, February 28, 2020

ஒட்டுமொத்த தொழிற்சாலையையுமே மூடிய ஹூண்டாய்!

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தாக்குதல்... ஒட்டுமொத்த தொழிற்சாலையையுமே மூடிய ஹூண்டாய்!

Hyundai Motor Shut down Factory as worker Test Positive for Coronavirus in south Korean cit Ulsan.
உலகின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களான பாலிசேட், டக்சன், சான்டா ஃபே மற்றும் ஜெனிசிஸ் GV80 ஆகிய கார்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படும்.

ஹூண்டாய் நிறுவனம் தனது தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனது தொழிற்சாலையையே மூடியுள்ளது.

தென் கொரியாவின் உல்சான் நகரில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் உற்பத்தித் தொழிற்சாலை அமைந்துள்ளது. கொரோனாவின் தாக்குதலால் ஆங்காங்கே உள்ள தனது தொழிற்சாலைகளில் தற்காலிக பணி விடுமுறை அளித்திருந்தது ஹூண்டாய். ஆனால், தற்போது தனது உல்சான் தொழிற்சாலையில் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது ஹூண்டாய்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா உள்ளது. உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலையாக உல்சான் நகரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.4 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுமார் 34 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.


உலகின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களான பாலிசேட், டக்சன், சான்டா ஃபே மற்றும் ஜெனிசிஸ் GV80 ஆகிய கார்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படும். இந்தத் தொழிற்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் ஹூண்டாயின் மொத்த உற்பத்தியில் 30 சதவிகிதம் நின்று போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment