Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, February 25, 2020

சமையல் காஸ் சிலிண்டர், 'வாட்ஸ் ஆப்'பில் முன்பதிவு!! இதோ நம்பர் மற்றும் முறை…


சமையல் காஸ் சிலிண்டர், 'வாட்ஸ் ஆப்'பில் முன்பதிவு!!


இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை
சென்னை:''சமையல் காஸ் சிலிண்டரை, 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம்,'' என, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான, செயல் இயக்குனர் ஜெயதேவன் தெரிவித்தார்.
போன் செய்தே சிலிண்டர் முன்பதிவு இத்தனை நாளாக சிலிண்டர் ஆர்டர் செய்ய வேண்டுமானால் போன் செய்தே முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் டிஜிட்டல் இந்தியாவில் எத்தனையோ சிறப்பம்சங்களும், தொழில்நுட்பங்களும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது நவீன முறையில் சிலிண்டர் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 851 காஸ் ஏஜென்சிகளும்; 1.36 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களும் உள்ளனர். தினமும், 2.65 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சிலிண்டர் டெலிவரியின் போது, எடை சரிபார்ப்பதுடன், காஸ் கசிவு இல்லை என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். மேலும், ரசீதில் உள்ள சிலிண்டர் கட்டணம் தவிர, கூடுதலாக பணம் தர வேண்டாம். இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி, எஸ்.எம்.எஸ்., வாயிலாக சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். தற்போது, 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, சிலிண்டர் பதிவு செய்ய வசதி உள்ளது.


75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் 75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.

சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். பிரதமரின் இலவச காஸ் இணைப்பு திட்ட பயனாளிகள், 14.20 கிலோ எடை உடைய சிலிண்டருக்கு பதில், மானிய விலையில், 5 கிலோ சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, ஜெயதேவன் கூறினார்.
 வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும், என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment