UNION BUDGET – 2020 FINANCE MINISTER NIRMALA
SITHARAMAN PRESENTS..
UNION BUDGET – 2020 FINANCE MINISTER NIRMALA SITHARAMAN |
மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள், முழுமையான
விவரங்கள் தரப்பட்டுள்ளன.
தனிநபர்களுக்கு புதிய
வருமானவரி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சில விலக்குகளுடன் வரிச்சலுகை
பெறலாம்.
புதிய வரிவிதிப்பின்படி, ஆண்டுக்கு
ரூ.5-7.5 லட்சம் வரை 10
சதவீதம் வரி, ரூ.7.5-ரூ.10 லட்சம்வரை 15
சதவீதம் வரி, ரூ.10-12.5 லட்சம் வரை 20
சதவீதம் வரி, ரூ.12.5 முதல் 15 லட்சம் வரை 25
சதவீதம் வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30
சதவீதம் வரி.
ரூ.5
லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு.
வங்கியில் டெபாசிட்
செய்துள்ள பணத்துக்கான காப்பீடு தொகை ரூ. ஒரு லட்சத்திலிருந்து ரூ.5லட்சமாக
உயர்வு.
எல்ஜசி காப்பீடு
நிறுவனத்தில் தனக்கிருக்கும் பங்கை மத்திய அரசு ஐபிஓ மூலம் விற்க முடிவு.
#LIC_IPO
நிதிப்பற்றாக்குறை 2020-ம்
நிதியாண்டில் 3.8 சதவீதமாக இருக்கும், முன்பு
3.3 சதவீதமாக இலக்க நிர்ணயிக்கப்பட்டது.
2020-21-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5
சதவீதமாக இருக்கும்
2020-21-ம் ஆண்டில் அரசின் பங்குவிலக்கல் மதிப்பு ரூ.1.20லட்சம்
கோடி இலக்கு. நடப்பு நிதியாண்டில் ரூ.65ஆயிரம் கோடி
திரட்டப்பட்டுள்ளது
2020-21-ம் ஆண்டில் வருவாய் ரூ.22.46
லட்சம் கோடி, செலவு ரூ.30.42 லட்சம் கோடி.
ஆதார் அடிப்படையில்
பான்கார்டு உடனடியாக ஒதுக்கப்படும்.
மத்திய அரசின் கடன் 2014
மார்ச்சில் 52.2சதவீதத்தில் இருந்து 2019
மார்ச்சில் 48.7 சதவீதமாகக் குறைவு.
IDBI BANK ஐடிபிஐ வங்கியின் அரசிடம்
இருக்கும் பங்குகள் தனியாருக்கும், அன்னியமுதலீட்டாளர்களுக்கும் பங்குச்சந்தை மூலம்
விற்கப்படும்.
பாதுகாப்புத்துறைக்கு 2020-21ம்
நிதியாண்டில் ரூ.3.23 லட்சம் கோடி ஒதுக்கீடு. நடப்பு நிதியாண்டில் ரூ3.16
லட்சம் கோடி ஒதுக்கீடு.
தனியார், அரசு
பங்களிப்புடன் வேளாண் பொருட்கள் கொண்டு செல்ல தனி ரயில்.
வேளாண் பொருட்கள், விரைவில்
அழுகும் காய்கறிகள், பழங்களைக் கொண்டு செல்ல கிஷான் உதான் விமான சேவை.
வேளாண்கடன் இலக்கு 2020-21-ம்
ஆண்டில் ரூ.15 லட்சம்
கோடி.
நபார்டு வங்கியின் மறுநிதி
திட்டம் மூலம் ரூ.2.83 லட்சம் கோடிக்கு வேளாண் மற்றும் தொடர்பான பணிகளுக்கு
ஒதுக்கீடு.
ஆயுஷ்மான்பாரத்
திட்டத்தில் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனை அமைத்தல்.
சுகாரத்துறைக்கு ரூ.69
ஆயிரம் கோடியும், தூய்மை இந்தியாதிட்டத்துக்கு ரூ.12,300
கோடியும் 2020-21ம் ஆண்டில் ஒதுக்கீடு.
விரைவில் புதிய கல்விக்
கொள்கை அறிவி்ப்பு.
கல்வித்துறையில் அன்னிய
நேரடி முதலீடுக்கு அனுமதி, வர்த்தகரீதியான கடன் பெறவும்அனுமதி.
தேசிய காவல்துறை பல்கலை, தேசிய
தடயவியல்அறிவியல் பல்கலை அமைத்தல்.
கல்வித்துறைக்கு ரூ.99,300
கோடி ஒதுக்கீடு, மற்றும் திறன் மேம்பாட்டுக்கு ரூ.3
ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
செல்போன், மின்னனு
சாதனங்கள், செமி கன்டக்டர் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவித்தல்.
தேசிய தொழில்நுட்ப ஜவுளி
இயக்கத்தின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.1,480
கோடி ஒதுக்கீடு.
ஏற்றுமதியாளர்கள் மத்திய, மாநில, உள்ளூர்
அளவில் டிஜிட்டல் முறையில் வரிகளை ரீபண்ட் பெறுதல்.
விரைவில் தேசிய
சரக்குப்போக்குவரத்துக் கொள்கை வெளியீடு, அதிகமான வேலைவாய்ப்பு
உருவாக்கத்தில் கவனம் செலுத்துதல்.
2023-ம் ஆண்டுக்குள் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை
முடிக்கப்படும், விரைவில் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை பணிகள்
தொடங்கப்படும்.
முக்கியமான சுற்றுலாத்
தளங்களுக்கு அதிகமான தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும்.
மும்பை-அகமதாபாத் இடையே
அதிவேக ரயில் இயக்க செயலூக்கம் கொடுக்கப்படும்.
முக்கியத் துறைமுகங்களில்
ஒன்றை கார்பரேட் மயமாக்கி, பங்குகள் பட்டியலிடப்படும்.
போக்குவரத்து
கட்டமைப்புக்கு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு.
புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி மற்றும் மின்திட்டங்களுக்கு ரூ.22
ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
தனியார் துறை டேட்டா
சென்டர் பூங்கா அமைக்க ஊக்கம்அளிக்கப்படும்.
பாரத்நெட் திட்டத்துக்கு
ரூ.6 ஆயிரம் கோடிஒதுக்கீடு.
#பாரத்நெட் #தேசியதடயவியல் சைபர்அறிவியல்பல்கலை.
பெண்கள் திருமண்
செய்துகொள்ளக்கூடிய வயது குறித்து பரிந்துரை செய்யகுழு.
எஸ்சி பிரிவினருக்கு ரூ.85ஆயிரம்
கோடியும், எஸ்டி பிரிவினருக்கு ரூ.53,700
கோடியும் ஒதுக்கீடு.
கம்பெனிச் சட்டத்தில்
திருத்தங்கள் செய்யப்படும்.
ஜம்மு,காஷ்மீர்
மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.30,757
கோடி ஒதுக்கீடு.
கார்ப்பரேட்
பங்குப்பத்திரங்களில் எப்பிஐ முதலீட்டை 9 சதவீதத்தில் இருந்து 15
சதவீதமாக உயர்த்த அனுமதி.
No comments:
Post a Comment