Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, February 26, 2020

'மேகதாது' பிரச்னையை கிளப்பிய கர்நாடகா ஆணைய கூட்டத்தில் முறியடித்த தமிழகம்

'மேகதாது' பிரச்னையை கிளப்பிய கர்நாடகா ஆணைய கூட்டத்தில் முறியடித்த தமிழகம்


மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிக்க, காவிரி நதிநீர் ஆணையத்தில், கர்நாடகா முயற்சித்த நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக, அது தவிர்க்கப்பட்டது.


காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 5வது கூட்டம், டில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் டாக்டர் மணிவாசன் பங்கேற்றார்.

தவிர, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர்
கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதில், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தின் துவக்கத்திலேயே, மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து ஆலோசிக்க வேண்டுமென, கர்நாடகா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, தமிழக அதிகாரிகள், கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட, ஒரு மணி நேரமாக, இவ்விஷயம் குறித்து, வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், இறுதியாக, மேகதாது குறித்து ஆலோசனையை தவிர்க்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மற்றொரு முக்கிய விஷயமாக, தமிழகமும், புதுச்சேரியும், தங்களுக்கான காவிரி நதிநீரை பங்கிட்டுக் கொள்ள, தாங்களே முடிவு செய்து கொள்வதாக தீர்மானித்து, அதை ஆணையத்திடம் தெரிவிக்கவே, அதற்கான ஒப்புதலும் தரப்பட்டது.

No comments:

Post a Comment