Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, February 14, 2020

தமிழக பட்ஜெட்:தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. TN GOVT BUDGET 2020 -2021


தமிழக பட்ஜெட்:தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:


தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 2019-20 -ம் நிதியாண்டில்.

7.27 சதவிகித வளர்ச்சி 2018-19 -ம் நிதியாண்டில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவிகிதமாக இருந்தது என்றும் 2019-20 -ம் நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருந்தது என்றும் நிதியமைச்சர் கூறினார். இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் அதிகமாக இருந்ததாக பெருமிதம் தெரிவித்த நிதியமைச்சர்,. வரும் நிதியாண்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

தமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு? செலவு எவ்வளவு.. பட்ஜெட் விவரம்..

மொத்த செலவு இந்நிலையில் தமிழகத்தின் மொத்த வருவாய்: 2,19,375 கோடி ரூபாய் ஆக உள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மொத்த செலவு: 2,41,601 கோடி ரூபாய் ஆக உள்ளதாக கூறினார். வருவாய் பற்றாக்குறை ரூ. 22,225 கோடி என்றும் அவர் கூறினார்.

தமிழக பட்ஜெட்: துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு?

உணவு மானியம் - ரூ.6,500 கோடி
பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி
உயர்கல்வித்துறை -ரூ.5,052.84 கோடி
மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி
மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி
சுகாதாரத்துறை - ரூ.15,863 கோடி
போக்குவரத்து துறை- ரூ.2716.26 கோடி
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி
கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி
வேளாண்மை துறை -11,894.48 கோடி
தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி
தொல்லியல் துறை - ரூ.31.93 கோடி
பேரிடர் மேலாண்மை -1360 கோடி
சிறைச்சாலைத்துறை- 392 கோடி
எரிசக்தி துறை - 20,115.58 கோடி
கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி
அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி
நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி
பயிர்க்கடன் - ரூ.11 ஆயிரம் கோடி
அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 18,540 கோடி.
குடிமராமத்து திட்டத்துக்கு - ரூ.300 கோடி
காவல்துறை - ரூ.8876.57 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை - ரூ.405.68 கோடி
சுற்றுலா துறை - ரூ.90 கோடி
மீன்வளத்துறை - ரூ.1,299.85 கோடி
இளைஞர் நலன் மற்றும் மேம்பாடு -ரூ.50.89
மாற்றுத்திறனாளிகள் நலன்-
ஜவுளித்தறி மற்றும் ஜவுளித்துறை - ரூ.1,224 கோடி
சம்பளங்கள் - ரூ.64,208 கோடி
ஓய்வூதியங்கள்- ரூ.32,009 கோடி
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள்- ரூ.4,315 கோடி
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்- ரூ.959.21 கோடி
நீர் பாசனம்- ரூ.6,991 கோடி

No comments:

Post a Comment