தங்கம் வரலாறு காணாத உச்சம்.... கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது!!!
சென்னையில்
தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது. முதல்முறையாக ஒரு சவரன்
தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை
கடந்துள்ளது. இதேபோல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் விலையும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர்
பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தங்கம் -
வெள்ளி சந்தையில் இன்று(பிப்.21) காலைநேர
நிலவரப்படி, 22காரட் ஒருகிராம்
ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,012-க்கும், சவரன் ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.42,110க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின்
விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனையாகிறது.
விலை ஏற்றம் ஏன்?
உலகளவில்
தங்கத்தின் விலை கடந்த 7 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டதாலும், தங்கத்தின் மீதான தேவை மற்றும் அதன் மீதான முதலீடு அதிகரித்திருப்பது
காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment