டெல்லி: மாதசம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான விஷயங்கள் என்று பார்த்தால் உயர் வருவாய் உடைய மாதசம்பளதாரர்களுக்கு வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது. வீடு வாங்குவதாக இருந்தால் 1.5 லட்சம் வரி விலக்கு கிடைக்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவார் என்று மாதசம்பளதார்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
எனினும் அவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது 5லட்சம் வரை வருமான வரி இல்லை என்ற சென்ற ஆண்டின் அறிவிப்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. அதேநேரம் 5லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரியாக 20 சதவீதம் செலுத்தி வந்தனர்.
பட்ஜெட் 2020: வரிகளில் மாற்றம்.. எந்த பொருள் விலை ஏறும், எது விலை குறையும்?
26000 சேமிப்பு
7.5லட்சம் வரை
இதை கொஞ்சம் மாற்றி உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன்படி 5லட்சம் முதல் 7.5லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் முன்பு 65000 வரை செலுத்திய நிலையில், இனி வரியாக 39000 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் காரணமாக இனி ரூ.26000 ஆண்டுக்கு சேமிக்க முடியும்.
39000 சேமிப்பு
ரூ.10 லட்சம்
அதேபோல் ஆண்டுக்கு 7.5லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் அல்லது வருவாய் பெறுவோர் இதுவரை 20 சதவீதம் வருமான வரி கட்டினார்கள் அதாவது 1.17 லட்சம் ரூபாய் வரியாக கட்டியிருப்பார்கள். இனி 78000 கட்டினால் போதும். இதன் மூலம் 10லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.39000 பணத்தை சேமிக்க முடியும்.
ரூ.78000 சேமிப்பு
12.5லட்சம் வருவாய்
10 முதல் 12.5லட்சம் ஆண்டுக்கு வாங்குவோர் இதுவரை 30 சதவீதம் பணம் அதாவது 1.97 லட்சம் வரை செலுத்தி வந்த நிலையில் இனி அவர்கள் 1.30லட்சம் ரூபாய் வருமான வரியாக செலுத்தினால் போதும். இதன் மூலம் இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் சேமிக்க முடியும். இதேபோல் 12.5லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இதுவரை 2.73லட்சம் ரூபாய் செலுத்தி இருப்பார்கள். இனி அவர்கள் 1.95லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும். இதன் மூலம் இவர்கள் ஆண்டுக்கு ரூ.78000 சேமிக்க முடியும்.
வீடு வாங்கினால்
1.5 லட்சம் சலுகை
கடைசியாக ஒரு விளக்கம், மேலே சொன்ன வருமான வரி விலக்கை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை ஆதாரமாக காண்பித்து வரி சலுகைகளை பயன்படுத்த முடியாது. இது மட்டுமல்ல, மாதசம்பளம் வாங்கும் பலரது கனவு என்றால் வீடு வாங்குவது (அதாவது வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்குவது ) இதற்கு கடந்த ஆண்டு 1.5லட்சம் ரூபாய் குறுகிய கால சலுகையாக வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் 1.5லட்சம் ரூபாய் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment