Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, February 24, 2020

அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!

அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!!!!



புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்...



சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப் அதிபர் டிரம்ப்!

 இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.. இந்த 2 நாள் பயணத்தில், பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு வருவதால் இந்த சம்பவம் உலக தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. குறிப்பாக வர்த்தக ரீதியான உறவு குறித்தும், நட்புறவு குறித்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.. அதே சமயம், குஜராத் மாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.


தாஜ்மஹால்
அதைத் தொடர்ந்து, ஆக்ரா செல்லும் டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். அங்கும், விமான நிலையத்தில் இருந்து, தாஜ்மஹால் வரையிலான, 13 கி.மீ., தூர சாலையில், டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

எல்லாம் நவீன மயம்!

அமெரிக்க அதிபர், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தில்
இந்தியா வருகிறார். இது, 'போயிங் 747 - 200 பி' நவீன வகையை சேர்ந்தது. இது, 12 ஆயிரத்து, 552 கி.மீ., இடைவிடாமல் பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'ஜாமர்' கருவிகள், எதிரி களின் ஏவுகணைகளை திசை திருப்பி விடும். வெள்ளை மாளிகையில் இருப்பது போன்ற, 'ஓவல் அலுவலகம்' இந்த விமானத்தில் உள்ளது.
* விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின், குறைந்த துாரத்துக்கு கார், நீண்ட துாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.
* இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தி பீஸ்ட் 2.0' காரை பயன்படுத்துகிறார். இதன் ஜன்னல் கண்ணாடிகளை வெடிகுண்டுகளால் கூட தகர்க்க முடியாது. இதில், சேட்டிலைட் தொலைபேசி, மருத்துவ வசதிகள் உள்ளன.
* காரை ரசாயன ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாது.
* அதிபரின் அதிகாரப்பூர்வ ஏர்போர்ஸ் ஒன் விமானத்துடன் தொடர்புடைய ஹெலிகாப்டரின் பெயர், 'மரைன் ஒன்!'
* அமெரிக்காவின் கப்பல் படையைச் சேர்ந்த பைலட்கள் இந்த ஹெலிகாப்டரை
இயக்குகின்றனர்.
* இதில், 14 பேர் அமரலாம். புறப்படும், தரையிறங்கும் போது ஏற்படும் சத்தம், அதிபரின்
கேபினில் கேட்காது. கேபினில் அமர்ந்து, சாதாரண ஒலி அளவிலேயேஅதிபர் பேசலாம். இதில், ஏவுகணை தடுப்பு கருவிகள் உள்ளன.



 



No comments:

Post a Comment