காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் 88 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள முக்கிய அதிகாரி உட்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட காலக்கட்டத்தில் பணியாற்றிய எஸ்பி அன்புச்செழியன், ரமேஷ் மற்றும் கூடுதல் எஸ்பி , டிஎஸ்பி உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment