Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, February 13, 2020

ரயிலில் அதிக லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.. விமானத்தை போல்.. தேஜஸ் ரயிலில் அறிமுகம்....

விமானத்தை போல்.. ரயிலில் அதிக லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.. தேஜஸ் ரயிலில் அறிமுகம்....



Watch your luggage weight on Tejas Express or pay more!!!!


As per the rules, an executive chair car passenger is allowed 70 kg luggage,while those travelling by chair car can carry up to 40 kg luluggage.

டெல்லி: விமானங்களை போல் ரயில் அதிக லக்கேஜுக்கு கூடுதல் கட்டம் வசூலிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுளள்து. முதற்கட்டமாக நாட்டின் முதல் தனியார் ரயிலான மும்பை-அகமதாபாத் தேஜஸ் ரயிலில் இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அதை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்வேயை தனியார் மயம் ஆக்க முயற்சித்து வருகிறது. முதற்கட்டமாக 150 முக்கிய ரயில்களை தனியார் இயக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான டெண்டர்கள் விரைவில் வெளியாக உள்ளது. இன்னொரு முயற்சியாக நாட்டின் முதல் இரண்டு தனியார் ரயில்களை இயக்கி வரும் ஐஆர்சிடிசி, அந்த ரயில்களில் அதிக லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. மும்பை -அகமதாபாத் இடையே தேஜஸ் ரயிலை ஐஆர்சிடிசி கடந்த ஜனவரி 17ம் தேததி முதல் இயக்கி வருகிறது. இந்த ரயிலில் தினமும் 950 பேர் பயணித்து வருகிறார்கள். இந்த ரயிலில் விமானத்தில் உள்ளதை போன்று க்கேஜ்க்கு அதிக கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.


Each Passanger can carry Luggage up to certain prescribed limit free of cost in the compartment.  the free allowance varies for different classes of the travel. Children between five years of age and blwo 12 years are allowed half the free allowance subject ri maximum of 50Kg.

ஆட்கள் இல்லை இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் இயல்பாகவே கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்த போதிய ஆட்கள் இல்லாது. எடை போட இயந்திரங்கள் இல்லாது உள்ளிட்ட சில காரணங்களால் நடைமுறைப்படுத்துவதில் சுனக்கம் இருக்கிறது.


அதிக உயரம் என்றால் இதன்படி கூடுதல் எடை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக நீளம் அதிக அகலம் கொண்ட லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. கூடுதல் எடை இருந்தால் ரூ.109 கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம். டிரங்க், சூட்கேஸ் மற்றும் பெட்டிகளின் வெளிப்புற அளவு 100 செமீ நீளம் மற்றும 60 செமீ அகலம் மற்றும் 25 செமீ உயரத்துக்குள் தான் இருக்க வேண்டும். இவற்றை மட்டுமே பயணிகள் பெட்டியில் அனுமதிப்போம். அதற்கு மேல் அளவில் இருந்தால் அதை பிரேக் வேனுக்கு அனுப்பி லக்கேஜ் ஆக கருதி கட்டணம் வசூலிக்கப்படும்.
Indian Railway Catering and Tourism Corporation (IRCTC), which is operating the Mumbai-Ahmedabad Tejas Express trains, has decided to strictly enforce luggage rules.

சிரமம் இருக்கிறது அதிக லக்கேஜ்களை சிலர் கொண்டு வருவதால் பிற பயணிகளுகு அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்க இடம் கிடைப்பதில்லை. சிலர் பெட்டிகளை கதவுக்கு அருகில் வைத்துவிடுகிறார்கள். இதனால் மக்கள் ரயில் நிலையங்களில் ஏறி இறங்குவது கூட சிரமமாக இருக்கிறது. எனவே தான் அதிக லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.


The Tejas Express between Mumbai and Ahmedabad was introduce on January 17 and carries around 950 passengers daily.

அதிக கட்டணம் விமானத்தில் உள்ளதை போல் லக்கேஜ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இந்த முடிவு தேஜஸ் ரயிலில் கொண்டு வரப்பட உள்ளது. பிற தேஜஸ் ரயில்கள் மற்றும் சதாப்தி ரயில்கள் உள்ளிட்ட அதிவேக ரயில்களிலும் லக்கேஜ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா என்று பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனினும் நடைமுறையில் உள்ள லக்கேஜ் நடைமுறையைத்தான் பின்பற்ற உள்ளோம். அதை தற்போது தீவிரமாக செயல்படுத்த உள்ளோம் என்று ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment