Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, February 28, 2020

கட்டணமில்லா வருவாயைப் பெருக்க புதிய யுக்திகளை ரயில்வே நிர்வாகம் புகுத்திவருகிறது….


கட்டணமில்லா வருவாயைப் பெருக்க புதிய யுக்திகளை ரயில்வே நிர்வாகம் புகுத்திவருகிறது….


ரயில்வே அமைச்சகமானது நாடு முழுவதும் ஜவுளித்துறைக்கான விளம்பரம், விற்பனைக்கென தனி கவுன்டர்களை ஸ்டேஷன்களில் உருவாக்கி வர்த்தக உறவை வலுப்படுத்தவுள்ளது.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஜவுளித்துறைக்கென விளம்பரம் மற்றும் விற்பனைக்கென தனி கவுன்டர் துவங்கப்பட்டுள்ளது. [Erode Railway station intrudes Advertisement for Textile & Sales counter for Textile items] கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களிலும் வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டணமில்லா வருவாயைப் பெருக்க புதிய யுக்திகளையும், புதுமைகளையும் ரயில்வே நிர்வாகம் புகுத்திவருகிறது. [Increase Non Fare Revenue to Railway department intrudes New Innovative Ideas at Railway stations] அந்த வகையில் ஸ்டேஷன்களில் ஜவுளித்துறை விளம்பரம் மற்றும் விற்பனைக்கென தனிகவுன்டர் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, Erode ஈரோடு ஸ்டேஷனை அடுத்து இதரஸ்டேஷன்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.இதனால் ரயில்வேக்கும் வருவாய் கிடைக்கும், ஜவுளித்துறையும் வளர்ச்சி பெறும். இதுபோன்ற புதிய சிந்தனைகள் வணிக ரீதியில் வருவாயும், வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் இருந்தால் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற புதுவித சிந்தனைகள், பரிந்துரைகளை, srdcm@sa.railnet.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

No comments:

Post a Comment