Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, February 12, 2020

மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு!!! LPG prices hiked by up to Rs 149 per cylinder...


மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு
LPG prices hiked by up to Rs 149 per cylinder...

LPG prices hiked by up to Rs 149 per cylinder...


சென்னை: இன்று (பிப்.,12) முதல் மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை ரூ.147 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

State-owned marketing companies have increased the prices of non-subsidised liquefied petroleum gas (LPG) or cooking gas cylinders by up to Rs 149 per cylinder from today. This is the sixth straight hike in LPG cylinder prices in the past few months.


தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மானியம் இல்லாத சிலிண்டரின் விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையத்தில் வெளியான அறிவிப்பு: டில்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்ந்து ரூ.858.50க்கும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.50க்கும் விற்பனையாகிறது. அதேபோல், தமிழகத்தில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.881க்கும், கோல்கட்டாவில் ரூ.149 அதிகரித்து ரூ.896க்கும் விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Non – Subsidised LPG Price

Metro City          LPG New Price                      Existing
Delhi                              858.00                                    714.00
Kolkata                         896.00                                    747.00
Mumbai               829.00                                    684.00
Chennai              881.00                                     734.00


கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து 6வது மாதமாக மானியமில்லா சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த 6 மாதத்தில் மட்டும் 287 ரூபாய் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment