Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, February 4, 2020

தமிழகத்தில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து


PUBLIC EXAMS FOR 5th & 8th STD CANCELLED

PUBLIC EXAMS FOR 5th & 8th STD CANCELLED


தமிழகத்தில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

 மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பழைய தேர்வு முறையே தொடரும்". இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (04/02/2020) காலை முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் பொதுத்தேர்வு ரத்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Where else you can find me “HOW TO GET MORE FOLLOWERS”

No comments:

Post a Comment