Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 28, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பொறையுடைமை.

 குறள் 152:

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று."

மு.வரதராசனார் உரை:

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

பரிமேலழகர் உரை:

என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்).

மணக்குடவர் உரை:

பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பிறர் செய்த குற்றத்தினை எப்போதும் பொறுத்துக்கொள்ளுதல் நல்லதாகும், அக்குற்றத்தினை மறந்துவிடுதல் அப்பொறுமையினையும் விடச் சிறந்ததாகும்.

Translation:

Forgiving trespasses is good always;

Forgetting them hath even higher praise;.

Explanation:

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

No comments:

Post a Comment