Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 7, 2020

தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது . 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் , நேற்று மழை பாதிப்பு சற்றே குறைந்து காணப்பட்டது . கடந்த 3 நாட்களாக மும்பை , தானே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது . தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் , பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன . அதே சமயம் மும்பை , தானே , பால்கர் , வடக்கு கொங்கன் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரளாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் அதிதீவிர கனமழையால் , முக்கிய அணைகள் , ஆறுகள் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் , தொடர் மழையாலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . கர்நாடகாவிலும் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் , பெங்களூரு , மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது . மழை நீடிப்பதால் , கே . ஆர் . எஸ் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது . எனவே , கபினி மற்றும் கே.ஆர்.எஸ் . அணைகளில் இருந்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது . குடகு மற்றும் வயநாட்டில் தொடர்ந்து மழை நீடித்தால் , தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

No comments:

Post a Comment