Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, August 7, 2020

சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம் மொத்தம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் கேட்க உள்ளது.

சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம் மொத்தம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் கேட்க உள்ளது.
China விற்கு எதிராக India வியூகம்.. 6 Satellites வேண்டும்!

இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் உள்ளது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதாக கூறிய சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை.

இதனால் அந்த இடங்களில் மட்டும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் முழு கவனத்துடன் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது

சீனா படை

இந்த நிலையில் சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம் மொத்தம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் அவசரமாக கேட்டு உள்ளது. அதாவது ராணுவ பயன்பாட்டிற்கு மட்டும் என்று கூறி 4-6 சாட்டிலைட்கள் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு உள்ளது. சீனாவின் படைகள் எங்கே செல்கிறது. எங்கே குவிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கும் பொருட்டு இந்த சாட்டிலைட்களை மத்திய அரசு கேட்டுள்ளது.


இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த மே மாதம் இறுதியில் லடாக் எல்லையில் திடீர் என்று 40000 வீரர்களை சீனா களமிறக்கிறது. கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் வேகமாக லடாக் எல்லையில் சீனா படைகளை களமிறக்கியது. இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில் 4000 கிமீ எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா தனது படைகளை களமிறக்கியது.

இதை இந்தியாவால் சரியாக கணிக்க முடியவில்லை. போதுமான சாட்டிலைட் தகவல்கள் இல்லாத காரணத்தால் கடைசி நேரத்தில்தான் சீனாவின் படை குவிப்பை கண்டுபிடிக்க முடிந்தது. ராணுவத்திற்கு என்று தனியாக நிறைய சாட்டிலைட்கள் இருந்தால் இப்படி நடந்திருக்காது. முறையான சாட்டிலைட் இருந்தால் சீனாவின் படை குவிப்பை முன்பே இந்திய ராணுவம் கணித்து இருக்கும்.

வியூகம்

இந்த நிலையில் இதற்காகவே தற்போது இந்திய பாதுகாப்பு படை 6 சாட்டிலைட்கள் கேட்கிறது. வீரர்களை கண்காணிக்கும் வகையில் துல்லியமான கேமராக்கள் கொண்ட ராணுவத்திற்கு மட்டும் என்று பயன்படும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சாட்டிலைட்களை கேட்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த சென்சார்கள் இதில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றும் இந்திய பாதுகாப்புத்துறை சார்பாக கேட்கப்பட்டுள்ளது .



இந்தியாவிடம் ஏற்கனவே ராணுவ பயன்பாட்டிற்கான சாட்டிலைட்கள் உள்ளது. ஆனால் இந்த சாட்டிலைட்கள் சீனாவின் ஆக்கிரமிப்பை முழுவதாக கண்டுபிடிக்க உதவவில்லை. சமயங்களில் நாம் தனியார் டேட்டாக்களை நம்ப வேண்டி உள்ளது. இதை தடுக்கும் வகையில் தற்போது இந்திய பாதுகாப்பு துறை மொத்தமாக 4-6 சாட்டிலைட்களை கேட்டு இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment