குறள் 262:
"தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது."
மு.வரதராசனார் உரை:
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.
பரிமேலழகர் உரை:
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை:
தவஞ்செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும்; அந்நல்வினையில்லாதார் அத்தவத்தை மேற்கொள்வது பயனில்லை. இது தவமிலார்க்குத் தவம் வாராது வரினுந் தப்புமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தவத்தினை மேற்கொள்ளுவதென்பதும் முற்பிறவித தவத் தன்மையுடையவர்களுக்கேயாகும். அத்தவப் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது பயனற்ற முயற்சியேயாகும்.
Translation:
To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'this but a vain pretense.
Explanation:
Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practiced them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practice them (now).
No comments:
Post a Comment