Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, February 29, 2020

இன்று லீப் தினம்!!! பிப்ரவரி 29! February 29, also known as leap day!!! or leap year day!!!

இன்று லீப் தினம்!!!



லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29-ந்தேதியை உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு லீப் வருடமாக ஒரு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப் படுகிறது. லீப் வருடத்தில் பிப்ரவரிக்கு 29 நாட்கள் வரும். இந்த நாள் உலகம் முழுவதும் அரிய நாளாக கொண்டாடப்படுகிறது.

February 29, also known as leap day or leap year day, is a date added to most years that are divisible by 4, such as 2016, 2020, and 2024. A leap day is added in various solar calendars (calendars based on the Earth's revolution around the Sun), including the Gregorian calendar standard in most of the world.

Friday, February 28, 2020

டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வேக்கு ரூ.9,000 கோடி வருவாய்..! Railways earned Rs 9000 Cr from ticket cancellation

Railways earned Rs 9000 Cr from ticket cancellation!!!



டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வேக்கு ரூ.9,000 கோடி வருவாய்..!
கோட்டா : இந்திய ரயில்வேயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம் மற்றும் ரத்து செய்யப்படாத முன்பதிவு டிக்கெட்டுகள் மூலம் மூன்றாண்டு காலத்தில் 9,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
The Centre for Railway Information Systems (CRIS), in response to the RTI application filed by Kota-based activist Sujeet Swami, said that in the three-year period from January 1, 2017 to January 31, 2020, there were over nine-and-a-half crore passengers whose wait-listed tickets were not cancelled. Such passengers brought the Indian Railways revenue of over Rs 4,335 crore.
ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜீத் சுவாமி என்பவர் மத்திய ரயில்வே தகவல் அமைப்பிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு மூலம் கிடைத்த விபரங்கள் வருமாறு:இந்திய ரயில்வேயில் 2017 ஜன. 1 முதல் 2020ம் ஆண்டு ஜன. 31 வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9.5 கோடி பயணியர் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவில்லை. இதன் மூலம் ரயில்வேக்கு 4335 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த மூன்றாண்டுகளில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணமாக மட்டும் 4,684 கோடி ரூபாயை பயணியரிடம் இருந்து ரயில்வே வசூலித்துள்ளது.
இந்த மூன்றாண்டு காலத்தில் இணையதளம் மூலமாக 145 கோடி பயணியரும் ரயில்வே கவுன்டர்களில் 74 கோடி பயணியரும் முன்பதிவு செய்துள்ளனர்.
There is also a huge difference in the number of people buying railway tickets through Internet and those from counters. In the three-year period, over 145 crore passengers purchased tickets through Internet, while over 74 crore people went to railway counters.

இதைத்தொடர்ந்து சுஜீத் சுவாமி தரப்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அந்த மனுவில் 'ஆன்லைன் மற்றும் கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ரயில்வே கொள்கைகளில் அதிக வேறுபாடுகள் உள்ளன. 'இதனால் பயணியருக்கு நிதிச்சுமை மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. இதில் பயணியருக்கு நிவாரணம் வழங்குவதுடன் ரயில்வே நியாயமற்ற முறையில் வருவாய் ஈட்டுவதையும் தடுக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

கட்டணமில்லா வருவாயைப் பெருக்க புதிய யுக்திகளை ரயில்வே நிர்வாகம் புகுத்திவருகிறது….


கட்டணமில்லா வருவாயைப் பெருக்க புதிய யுக்திகளை ரயில்வே நிர்வாகம் புகுத்திவருகிறது….


ரயில்வே அமைச்சகமானது நாடு முழுவதும் ஜவுளித்துறைக்கான விளம்பரம், விற்பனைக்கென தனி கவுன்டர்களை ஸ்டேஷன்களில் உருவாக்கி வர்த்தக உறவை வலுப்படுத்தவுள்ளது.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஜவுளித்துறைக்கென விளம்பரம் மற்றும் விற்பனைக்கென தனி கவுன்டர் துவங்கப்பட்டுள்ளது. [Erode Railway station intrudes Advertisement for Textile & Sales counter for Textile items] கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களிலும் வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டணமில்லா வருவாயைப் பெருக்க புதிய யுக்திகளையும், புதுமைகளையும் ரயில்வே நிர்வாகம் புகுத்திவருகிறது. [Increase Non Fare Revenue to Railway department intrudes New Innovative Ideas at Railway stations] அந்த வகையில் ஸ்டேஷன்களில் ஜவுளித்துறை விளம்பரம் மற்றும் விற்பனைக்கென தனிகவுன்டர் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, Erode ஈரோடு ஸ்டேஷனை அடுத்து இதரஸ்டேஷன்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.இதனால் ரயில்வேக்கும் வருவாய் கிடைக்கும், ஜவுளித்துறையும் வளர்ச்சி பெறும். இதுபோன்ற புதிய சிந்தனைகள் வணிக ரீதியில் வருவாயும், வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் இருந்தால் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற புதுவித சிந்தனைகள், பரிந்துரைகளை, srdcm@sa.railnet.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

ஒட்டுமொத்த தொழிற்சாலையையுமே மூடிய ஹூண்டாய்!

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தாக்குதல்... ஒட்டுமொத்த தொழிற்சாலையையுமே மூடிய ஹூண்டாய்!

Hyundai Motor Shut down Factory as worker Test Positive for Coronavirus in south Korean cit Ulsan.
உலகின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களான பாலிசேட், டக்சன், சான்டா ஃபே மற்றும் ஜெனிசிஸ் GV80 ஆகிய கார்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படும்.

ஹூண்டாய் நிறுவனம் தனது தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனது தொழிற்சாலையையே மூடியுள்ளது.

தென் கொரியாவின் உல்சான் நகரில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் உற்பத்தித் தொழிற்சாலை அமைந்துள்ளது. கொரோனாவின் தாக்குதலால் ஆங்காங்கே உள்ள தனது தொழிற்சாலைகளில் தற்காலிக பணி விடுமுறை அளித்திருந்தது ஹூண்டாய். ஆனால், தற்போது தனது உல்சான் தொழிற்சாலையில் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது ஹூண்டாய்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா உள்ளது. உலகின் மிகப்பெரிய கார் தொழிற்சாலையாக உல்சான் நகரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.4 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுமார் 34 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.


உலகின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களான பாலிசேட், டக்சன், சான்டா ஃபே மற்றும் ஜெனிசிஸ் GV80 ஆகிய கார்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படும். இந்தத் தொழிற்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் ஹூண்டாயின் மொத்த உற்பத்தியில் 30 சதவிகிதம் நின்று போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

FASTag இல்லாத வாகனங்களிடம் இரட்டிப்புக் கட்டணம்...

FASTag இல்லாத வாகனங்களிடம் இரட்டிப்புக் கட்டணம்... மிரள வைக்கும் அபராதத் தொகை வசூல்!


FASTag இல்லாமல் FASTag வரிசையில் நுழையும் வாகனங்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்திருந்தது.

இதுவரையில் 1.55 கோடி FASTag அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், FASTag இல்லாமல் FASTag வரிசையில் தவறாக நுழைந்தோர்களிடம் இருந்து 20 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் பேரிடமிருந்து இந்த 20 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்தான் FASTag முறையே அறிமுகமானது. ஆனால், மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில் அபராதக் கட்டணம் மட்டும் கோடிகளில் வசூலாகியுள்ளது.

நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் டோல் கட்டணம் செலுத்த நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் அவஸ்தையைப் போக்கவே நெடுஞ்சாலைத்துறை சார்பாக FASTag என்னும் எலெக்ட்ரானிக் கட்டண முறை அமல் செய்யப்பட்டது. இதுவரையில் 1.55 கோடி FASTag அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

Wednesday, February 26, 2020

'மேகதாது' பிரச்னையை கிளப்பிய கர்நாடகா ஆணைய கூட்டத்தில் முறியடித்த தமிழகம்

'மேகதாது' பிரச்னையை கிளப்பிய கர்நாடகா ஆணைய கூட்டத்தில் முறியடித்த தமிழகம்


மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிக்க, காவிரி நதிநீர் ஆணையத்தில், கர்நாடகா முயற்சித்த நிலையில், தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக, அது தவிர்க்கப்பட்டது.


காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 5வது கூட்டம், டில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில், பொதுப்பணித்துறை முதன்மை செயலர் டாக்டர் மணிவாசன் பங்கேற்றார்.

தவிர, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர்
கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதில், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தின் துவக்கத்திலேயே, மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து ஆலோசிக்க வேண்டுமென, கர்நாடகா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, தமிழக அதிகாரிகள், கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட, ஒரு மணி நேரமாக, இவ்விஷயம் குறித்து, வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், இறுதியாக, மேகதாது குறித்து ஆலோசனையை தவிர்க்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மற்றொரு முக்கிய விஷயமாக, தமிழகமும், புதுச்சேரியும், தங்களுக்கான காவிரி நதிநீரை பங்கிட்டுக் கொள்ள, தாங்களே முடிவு செய்து கொள்வதாக தீர்மானித்து, அதை ஆணையத்திடம் தெரிவிக்கவே, அதற்கான ஒப்புதலும் தரப்பட்டது.

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின், 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் மொழிபெயர்ப்புக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கியமான 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ மிகச் சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 'வம்சி' பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டது.

சங்க காலப் பாணர், கூத்தர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்நாவல், பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டது. இந்த நாவலை சிறப்பாக மொழிபெயர்த்த எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ.50 ஆயிரம் ரொக்கமும், செம்புப் பட்டயமும் விருதாக அளிக்கப்படும். விருது வழங்கப்படும் நாள் அறிவிக்கப்படவில்லை.இவருக்கு எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tuesday, February 25, 2020

இந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் விற்பனை டீலில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு புதிய நபரின் பெயர் அடிபடத் தொடங்கி இருக்கிறது. New Name In the race to buy Air India

New Name In the race to buy Air India...

இந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் விற்பனை டீலில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு புதிய நபரின் பெயர் அடிபடத் தொடங்கி இருக்கிறது.

ஏர் இந்தியாவை வாங்கலாமா..? யோசனையில் அதானி!

The deciding factor for Adani to bid for Air India would be the debt and losses.
மத்திய அரசு  ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க தயாராகிக் கொண்டிருக்கும் செய்தியை நாம் அறிவோம். ஏன் இந்த முறை ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்று கேட்கிறீர்களா..?


கடந்த முறைகளில் எல்லாம் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை (76 %) மட்டுமே விற்க, மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால் இந்த முறை ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க, மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதனால் தான் ஏர் இந்தியா விற்பனையும் செய்திகளில் அதிகம் அடிபடத் தொடங்கி இருக்கிறது.

The buyer will have to take on a fixed debt of Rs 23,286.5 crore along with certain identified current and non-current liabilities. The airline has been in losses during the last few years.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 31, 2019 நிலவரப்படி சுமார் 60,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். புதிதாக ஏர் இந்தியா நிறுவனத்தில் வாங்க இருப்பவர்கள், இந்த கடனில் சுமார் 23 ஆயிரத்து 286 கோடி ரூபாய் கடனை சமாளிக்க வேண்டி இருக்குமாம்.


While the privatization bid document does not place any restriction on Adani from bidding for Air India, Airports Authority of India (AAI) restricts an airline or a group owning an airline to hold no more than 27 per cent in the airports.


வரும் 2020 - 21 நிதி ஆண்டில், மத்திய அரசு தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பங்குகளை விற்று 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. 
இந்த இலக்கை அடைய ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விற்பனையும் கை கொடுக்கும் என்கிறார்கள் இந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் விற்பனை டீலில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு புதிய நபரின் பெயர் அடிபடத் தொடங்கி இருக்கிறது. அவர் தான் தொழிலதிபர் கௌதம் அதானி. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க கௌதம் அதானியின் அதானி குழுமம் கூட விருப்பம் தெரிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 


A similar clause restricting airlines or group owning airlines from owning more than 10 per cent in Delhi airport recently resulted in the collapse of the Tata-GIC group's investment in GMR.

Air India and its subsidiary, Air India Express own about 120 aircraft at FY18-end and 126 aircraft till September last year.

After its unsuccessful bid to sell Air India in 2018, the government this time has decided to offload its entire stake. In 2018, the government had offered to sell its 76 per cent stake in the airline.

Of the total debt of Rs 60,074 crore as of March 31, 2019, the buyer would be required to absorb Rs 23,286.5 crore, while the rest would be transferred to Air India Assets Holding Ltd (AIAHL), the special purpose vehicle.

As a precursor to Air India sale, the Cabinet in February 2019 approved setting up AIAHL to transfer Rs 29,464 crore worth loans of the national carrier and its four subsidiaries-- Air India Air Transport Services (AIATSL), Airline Allied Services (AASL), Air India Engineering Services Ltd (AIESL) and Hotel Corporation of India (HCI).


சமையல் காஸ் சிலிண்டர், 'வாட்ஸ் ஆப்'பில் முன்பதிவு!! இதோ நம்பர் மற்றும் முறை…


சமையல் காஸ் சிலிண்டர், 'வாட்ஸ் ஆப்'பில் முன்பதிவு!!


இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை
சென்னை:''சமையல் காஸ் சிலிண்டரை, 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம்,'' என, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான, செயல் இயக்குனர் ஜெயதேவன் தெரிவித்தார்.
போன் செய்தே சிலிண்டர் முன்பதிவு இத்தனை நாளாக சிலிண்டர் ஆர்டர் செய்ய வேண்டுமானால் போன் செய்தே முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் டிஜிட்டல் இந்தியாவில் எத்தனையோ சிறப்பம்சங்களும், தொழில்நுட்பங்களும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது நவீன முறையில் சிலிண்டர் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 851 காஸ் ஏஜென்சிகளும்; 1.36 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களும் உள்ளனர். தினமும், 2.65 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சிலிண்டர் டெலிவரியின் போது, எடை சரிபார்ப்பதுடன், காஸ் கசிவு இல்லை என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். மேலும், ரசீதில் உள்ள சிலிண்டர் கட்டணம் தவிர, கூடுதலாக பணம் தர வேண்டாம். இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி, எஸ்.எம்.எஸ்., வாயிலாக சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். தற்போது, 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, சிலிண்டர் பதிவு செய்ய வசதி உள்ளது.


75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் 75888 88824 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க் சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.

சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். பிரதமரின் இலவச காஸ் இணைப்பு திட்ட பயனாளிகள், 14.20 கிலோ எடை உடைய சிலிண்டருக்கு பதில், மானிய விலையில், 5 கிலோ சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, ஜெயதேவன் கூறினார்.
 வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும், என்று கூறியுள்ளார்.

Monday, February 24, 2020

அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!

அதிபர் டிரம்பை வரவேற்க ஆமதாபாத் நகரம் விழாக்கோலம்!!!!



புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்...



சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப் அதிபர் டிரம்ப்!

 இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.. இந்த 2 நாள் பயணத்தில், பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு வருவதால் இந்த சம்பவம் உலக தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. குறிப்பாக வர்த்தக ரீதியான உறவு குறித்தும், நட்புறவு குறித்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.. அதே சமயம், குஜராத் மாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.


தாஜ்மஹால்
அதைத் தொடர்ந்து, ஆக்ரா செல்லும் டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தார், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். அங்கும், விமான நிலையத்தில் இருந்து, தாஜ்மஹால் வரையிலான, 13 கி.மீ., தூர சாலையில், டிரம்பை வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

எல்லாம் நவீன மயம்!

அமெரிக்க அதிபர், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தில்
இந்தியா வருகிறார். இது, 'போயிங் 747 - 200 பி' நவீன வகையை சேர்ந்தது. இது, 12 ஆயிரத்து, 552 கி.மீ., இடைவிடாமல் பறக்கும். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'ஜாமர்' கருவிகள், எதிரி களின் ஏவுகணைகளை திசை திருப்பி விடும். வெள்ளை மாளிகையில் இருப்பது போன்ற, 'ஓவல் அலுவலகம்' இந்த விமானத்தில் உள்ளது.
* விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின், குறைந்த துாரத்துக்கு கார், நீண்ட துாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.
* இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தி பீஸ்ட் 2.0' காரை பயன்படுத்துகிறார். இதன் ஜன்னல் கண்ணாடிகளை வெடிகுண்டுகளால் கூட தகர்க்க முடியாது. இதில், சேட்டிலைட் தொலைபேசி, மருத்துவ வசதிகள் உள்ளன.
* காரை ரசாயன ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாது.
* அதிபரின் அதிகாரப்பூர்வ ஏர்போர்ஸ் ஒன் விமானத்துடன் தொடர்புடைய ஹெலிகாப்டரின் பெயர், 'மரைன் ஒன்!'
* அமெரிக்காவின் கப்பல் படையைச் சேர்ந்த பைலட்கள் இந்த ஹெலிகாப்டரை
இயக்குகின்றனர்.
* இதில், 14 பேர் அமரலாம். புறப்படும், தரையிறங்கும் போது ஏற்படும் சத்தம், அதிபரின்
கேபினில் கேட்காது. கேபினில் அமர்ந்து, சாதாரண ஒலி அளவிலேயேஅதிபர் பேசலாம். இதில், ஏவுகணை தடுப்பு கருவிகள் உள்ளன.