Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, May 21, 2020

திருமலை ஏழுமலையான் பக்தர்களுக்கு, பாதி விலையில் திருப்பதி லட்டு: தேவஸ்தானம் ஏற்பாடு!




பாதி விலையில் திருப்பதி லட்டு: தேவஸ்தானம் ஏற்பாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையான் பக்தர்களுக்கு, பாதி விலையில் லட்டு பிரசாதம் வழங்க, தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து உள்ளது.தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி கூறியாதாவது: பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன பாக்கியம் கிடைக்கவில்லை என்றாலும், அவரது பிரசாதமாவது வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால், 50 ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து, 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.பொது முடக்கம் முடியும் வரை, இந்த விலை குறைப்பு இருக்கும். ஆந்திர மாநிலம் முழுதும் உள்ள மாவட்ட மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில், லட்டு விற்பனை செய்யப்படும். இன்னும், இரண்டு, மூன்று நாட்களில், தேதி அறிவிக்கப்படும்.பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டாலும், ஏழுமலையான் மீது பக்தி கொண்ட பக்தர்கள் இ-உண்டியல் மூலம், ஏழுமலையானுக்கு காணிக்கைகள் சமர்ப்பித்தனர். அந்தவகையில், ஏப்., மாதம், 1.97 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது, கடந்த ஆண்டு, பக்தர்கள் இ-உண்டியல் மூலம் சமர்ப்பித்த காணிக்கையை விட, 18 லட்சம் ரூபாய் அதிகம்.

No comments:

Post a Comment