Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, May 19, 2020

நம் கோயம்புத்தூர் கடையை வாங்கிய முகேஷ் அம்பானி! billionaire Mukesh Ambani has acquired Tamil Nadu Coimbatore Based department store chain




https://youtu.be/x762U8GE5Aw

நம் கோயம்புத்தூர் கடையை வாங்கிய முகேஷ் அம்பானி!

Reliance Retail to acquire Tamil Nadu-based department store chain. Reliance Retail Ventures Ltd, a unit of billionaire Mukesh Ambani-led Reliance Industries Ltd, has acquired Coimbatore, Tamil Nadu-based Shri Kannan Departmental Store Pvt. Ltd to expand its operations in southern India.


முகேஷ் அம்பானிக்கு அதிக இண்ட்ரோ தேவை இல்லை. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். ஏன் ஆசியாவில் நம்பர் 1 பணக்காரர்.

தற்போதைக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வழியாக அதிக லாபம் ஈட்டிக் கொண்டு இருந்தாலும், தன் அடுத்த பெரிய வியாபாரத்தை நோக்கி தன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை மடை மாற்றிக் கொண்டு இருக்கிறார்.
அப்படி முகேஷ் அம்பானி அதிகம் நம்பும் தொழில்கள் டெலிகாம் மற்றும் ரீடெயில். அதன் வெளிப்பாடாகத் தான் கோயம்புத்தூர் கடையை வாங்கி இருக்கிறார் முகேஷ் அம்பானி.
எந்த கடை
கோவையில் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் என்கிற கடையைத் தான் சுமார் 152.5 கோடி ரூபாயைக் கொடுத்து வாங்கி இருக்கிறாராம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் துணை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர் தான் 152.5 கோடி ரூபாயைக் கொடுத்து வாங்கி இருக்கிறது.
பங்கு விவரம்
ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்-ல் சுமாராக 7.86 லட்சம் பங்குகள் இருக்கிறதாம். நம் தட்டில் லெக் பீஸ் உடன் சுவையான பிரியாணி வைத்தால் எப்படி மிச்சம் வைக்காமல் சாப்பிடுவோமோ அப்படி, அனைத்து பங்குகளையும் வாங்கி 100 % ஓனர் ஆகி இருக்கிறது ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர்.
லாபம் எவ்வளவு
கடந்த 15 செப்டம்பர் 1999-ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் வியாபார செயல்பாடுகளில் இருந்து மட்டும் வரும் வருவாய் (Operating Revenue) 415 கோடி ரூபாயாக இருந்ததாம். அடுத்த 2017 - 18 நிதி ஆண்டில் 450 கோடி ரூபாயாகவும், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 481 கோடி ரூபாயாகவும் நிலையாக வளர்ச்சி கண்டிருக்கிறது.


நிகர லாபம்
2016 - 17 நிதி ஆண்டில் நிகர லாபமாக 2 கோடி ரூபாயும், 2017 - 18 நிதி ஆண்டில் நிகர லாபமாக 3 கோடி ரூபாயும், 2018 - 19 நிதி ஆண்டில் நிகர லாபமாக 4 கோடி ரூபாயும் பார்த்து இருக்கிறது ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ். இவர்களுக்கு கோவை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சொந்தமாக 29 கடைகள் இருக்கிறதாம்.

ரிலையன்ஸ் ரீடெயில்
கடந்த ஆண்டு நிலவரப் படி, ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் கடைகளில், சுமார் 50 கோடி பேர் வந்து இருக்கிறார்களாம். கடந்த ஆண்டில் வருவாய் 1.3 லட்சம் கோடி வந்திருக்கிறதாம். சுமார் 7,000 டவுன்கள் & நகரங்களில் கடை விரித்து இருக்கிறது ரிலையன்ஸ் ரீடெயில்.

சிறு நகரம்
ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் மொத்தம் 10,415 கடைகளை இந்தியா முழுக்க நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த மொத்த கடைகளில் 3-ல் 2 பங்கு கடைகள் டயர் 2, டயர் 3 மற்றும் டயர் 4 டவுன்களில் தான் நடத்திக் கொண்டு இருக்கிறதாம்.

விரிவாக்கம்
ஆக ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் தன்னை, தென் இந்தியாவிலும் வலுப்படுத்திக் கொள்ள, நம் தமிழகத்தின் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தை வளைத்து இருக்கிறது. இன்னும் ரிலையன்ஸ், எந்த எந்த நிறுவனத்தை எல்லாம் வாங்கி, தன் வியாபாரத்தை பிரம்மாண்டமாக மாற்றப் போகிறதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment