Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, April 1, 2020

ஏமாற்றாதே... ஏமாறாதே! - இன்று உலக முட்டாள்கள் தினம்!!! APRIL FOOLS DAY!!!


ஏமாற்றாதே... ஏமாறாதே! - இன்று உலக முட்டாள்கள் தினம்!!! APRIL FOOLS DAY!!!

வயது வித்தியாசம் இல்லாமல் மற்றவரை ஏமாற்றும் நாள் தான் 'ஏப்ரல் முதல் நாள்'. பெரும்பாலான நாடுகள் இதனை கடைபிடிக்கின்றன.

கனடாநியூசிலாந்துலண்டன்ஆஸ்திரேலியாதென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரிய விழாக்கள் போல் கடைபிடிப்பார்கள். 


ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவானது எப்படி?- சுவாரசிய வரலாறு!

உலக அளவில் மகளிர் தினம்நண்பர்கள் தினம்தந்தையர் தினம்காதலர் தினம்குழந்தைகள் தினம்தொழிலாளர்கள் தினம் என்று மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன்வருவதில்லை.

அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் 'முட்டாள்தனமான அறிவாளிகளின் தினம்என்று இன்றைய தினத்தைக் கூறினாலும் பிழையாகாது. ஆம்..நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில்..சக நண்பர்களிடம்வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது.

அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது. உன் சட்டையிலே என்ன கற உன் பின்னே பாம்பு..என்று ஆரம்பித்து பல ஏமாற்றுக் கேள்விகளை நண்பர்களிடம் சொல்லி...ஏமாற்றி விளையாடி இருப்போம்.. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம்..

உலகம் முழுவதும் பலரைக் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இன்றைய தினம்எப்படி உருவானதுஅதன் வரலாற்றுப் பின்னணியில் பல கதைகள் உண்டு. 1500-களில் ஐரோப்பியர்கள் கடைப்பிடித்த ஒரு பழக்கமாக ஏப்ரல் 1 கூறப்படுகிறது.
என்ன காரணம்
பிரான்சில் முதன் முதலில்இத்தினம் கொண்டாடப்பட்டது. 16ம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்.1 தான், புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. அப்போதைய ஜூலியன் காலண்டரிலும் இவ்வாறு தான் இருந்தது. பின் 13ம் போப் கிரிகோரி, 1582 பிப்., 29ல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இதில் ஜன.1, புத்தாண்டாக மாற்றப்பட்டது.

இதனை ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை இந்த காலண்டரை 1582 அக்., முதல் பயன்படுத்த துவங்கின. 1752ல் இங்கிலாந்து, அமெரிக்காவிலும்மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது.புதிய காலண்டரை ஏற்காத நாடுகளை கிண்டல் செய்வதற்காக 'முட்டாள்கள் தினம்' அறிமுகமானது. நாளடைவில் அனைத்து நாடுகளும் இத்தினத்தை முட்டாள்கள் தினமாக கொண்டாடின.
கடந்த 1508 முதலே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது என்றும், 1539ல் டச்சு மொழியில் இத்தினம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்ததென்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1466ல் பிலிப்பைன்சை சேர்ந்த மன்னனை அவரது அவைக் கவிஞர் முட்டாளாக்கிய தினம் இது என்றும் ஒரு கருத்து உண்டு.




No comments:

Post a Comment