Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, March 5, 2020

மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு எந்த வித பி.எஸ் 4 வாகனத்தையும் பதிவு செய்ய முடியாது

சென்னை: பி.எஸ். 4 வாகனங்களை மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யக்கூடாது என போக்குவரத்துத் துறை ஆணையா் தென்காசி எஸ்.ஜவஹா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காற்று மாசு பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வந்தது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. நீதிமன்றமும் மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு பி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு பி.எஸ். 4 வாகனங்களைப் பதிவு செய்யக் கூடாது என போக்குவரத்துத் துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம், மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு பி.எஸ் 4 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலியிருந்து பி.எஸ் 4 வாகனங்களை விற்கவோ பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு எந்த வித பி.எஸ் 4 வாகனத்தையும் பதிவு செய்ய முடியாது. அதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காத்திருக்கும் அனைத்து வாகனங்களுக்கான பதிவுப் பணிகளை முடிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது. இது தொடா்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஆகியோா் தங்களது பகுதியில் உள்ள வாகன விற்பனையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இந்த உத்தரவு குறித்து விளக்கிக் கூற வேண்டும். மேலும் பொதுமக்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment